21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என உலகின் மிகவும் பிரபல்யமான சஞ்சிகையான விஸ்டன் (Wisden) சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பெருமை சேர்ப்பதற்காக முத்தையா முரளிதரன் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளார்.
அவரது இந்த சாதனைக்குத் அவரை நான் மனதார வாழ்த்துகின்றேன் என்றும் கூறியுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தினூடாக ஜனாதிபதி இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
My warmest congratulations to our cricketing legend Muttiah Muralitharan for being named as the most valuable test player of the 21st Century by @WisdenCricket - This is a great honor and a proud moment for all Sri Lankans. I wish him all the best ! pic.twitter.com/n1h7Baqw7U
— Gotabaya Rajapaksa (@GotabayaR) June 29, 2020
உலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 21 ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகை அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி கிரிக்கெட் பகுப்பாய்வு நிறுவனமான CricViz உடன் இணைந்து விஸ்டன் சஞ்சிகை 21 ஆம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முரளிதரன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
You May Like This Video