சஜித் தொடர்பில் ஜே.வி.பி கண்டுபிடித்துள்ள உண்மை

53shares

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடர்பில் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்த கருத்துக்களால் உருவான சர்ச்சை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பலவீனமான தலைவர் என்ற உண்மை வெளிப்படுத்தியுள்ளது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஹரீன்பெர்ணான்டோ தான் தெரிவித்த கருத்துக்களில் உறுதியாக காணப்பட்ட போதிலும் சஜித் பிரேமதாச அவரை, பேராயரை சந்திப்பதற்காக இழுத்துச் சென்றுள்ளார் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஹரீன் பெர்ணாண்டோ பேராயரை விமர்சித்து உரையாற்றிய பின்னர் அவருக்கு எதிராக விமர்சனங்கள் வெளியாகின.

எனினும் ஹரீன் தனது நிலைப்பாட்டினை மேலும் உறுதியாக்கி மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பைபிளை மேற்கோள் காட்டினார் என பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹரீன் பெர்ணான்டோ தான் தெரிவித்தது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் தான் தெரிவித்ததை உறுதியாக நம்பினார் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக சஜித் பிரேமதாச ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சஜித் பிரேமதாச தான் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசியலை பின்பற்றவில்லை. மக்களை கவரும் ஜனரஞ்சக அரசியலை பின்பற்றுகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது