முல்லைத்தீவில் இளைஞரின் உயிரை பறித்த கிணறு

80shares

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கிணறு ஆழப்படுத்த இறங்கிய இருவரில் அமுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேசன் குடியிருப்பு 01ஆம் வட்டாரத்தில் நேற்று காலை இடம்பெற்றதுடன் 24 வயதான ஆ.றதுர்யன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடும் வறட்சி காரணமாக நேசன் குடியிருப்பு பகுதி மக்களின் கிணறுகள் வற்றி காணப்படுகின்றன.

இந்நிலையில் கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதற்காக மேலும் ஆழப்படுத்த முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது கிணற்றில் இறங்கியவர்கள் மயக்கம் அடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கிணற்றிற்குள் வேப்பம் இலைகள் கட்டி இறக்கப்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுளது மற்றையவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது