மத்திய வங்கி விவகாரம்; குற்றவியல் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் நாட்டின் முக்கிய பிரமுகர்

15shares

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றை வழங்க இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வருமாறு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று குற்றவியல் விசாரணை திணைக்களம் வாக்கு மூலங்களை பெறவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையிலேயே இன்றைய தினம் ரணில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டமா அதிபர், அண்மையில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு, மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றவியல் விசாரணை திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது