இரத்தினக்கல் தருவதாக கூறி மோசடி செய்த பெண் வசமாக சிக்கினார்

37shares

இரத்தினக்கல் தருவதாக கூறி 14 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் சுமார் ஒரு வருடத்திற்குப் பின் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்ற வருடம் செப்டம்பர் மாதம் கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இரத்தினக்கல் தருவதாக கூறி நபர் ஒருவரிடமிருந்து 14 லட்ச ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று அது தொடர்பில் கந்தானை பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 47 வயதுடைய பெண் கந்தானை ஐவரி கார்டன் என்ற முகவரியில் வசித்து வருபவர்.

அவரின் கைதை எடுத்து அதனுடன் தொடர்புடைய மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று வத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அமெரிக்காவில் மற்றுமொரு கருப்பினத்தவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை -வெடித்தது பாரிய போராட்டம்

அமெரிக்காவில் மற்றுமொரு கருப்பினத்தவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை -வெடித்தது பாரிய போராட்டம்