கடற்படை வீரருக்கு எமனாக வந்த உழவு இயந்திரம்! சம்பவ இடத்திலேயே உயிர் போன பரிதாபம்

69shares

திருகோணமலை - தம்பலகாமம் 99ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (30) இடம்பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் உயிரிழந்தவர் சம்பூர் கடற்படை முகாமில் படை வீரராகப் பணிபுரியும் விக்கிரம திலக (வயது-31) என்பவராவர்.

இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரத்தில் நேருக்கு நேர் மோதியதில் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நாளைய தினம்(1) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதோடு தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!