கருணாவுக்கு எழுந்துள்ள மற்றுமொரு சிக்கல் - தேர்தலில் போட்டியிட தடை?

319shares

ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொன்றதாக தெரிவித்த கருணாவைதேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இராணுவத்தினரை பெருமளவில் கொன்றதாக கருணா தெரிவித்த கூற்றின் மூலம் பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் பாராளுமன்ற சட்டத்தின் 81 ஆவது சரத்து மீறப்பட்டிருக்கின்றது.

அதனால் உடனடியாக அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்கவேண்டும் என தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கின்றோம்.

கருணா விடுதலை புலிகளின் கிழக்கு பிராந்திய ஆயுத படைகளின் தலைவராக இருந்துகொண்டு அவர் மேற்கொண்ட கொலைகள் தொடர்பாக அவரின் நாவினாலே தெரிவித்திருந்தார்.

3 ஆயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் தெரிவித்த கூற்று தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு முறையிட்டிருக்கின்றோம்.

கொலைக் குற்றச்செயலை செய்ததாக உறுதி மொழி வழங்கும் கருணாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அனைவரும் இதுதொடர்பில் பொறுப்பு கூறவேண்டும்.

அதேபோன்று தற்போது கருணாவை தூய்மைப்படுத்த சில அரசியல் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என மேலும் அவர் தெரிவித்தார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!