சஜித்தின் தேர்தல் பிரசாரத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட நிலை

43shares

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வடக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ள நிலையில் செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தினை வவுனியாவில் ஆரம்பிக்கவுள்ள நிலையிலேயே இந்த கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கான அனைத்து பொருட்களும் விசேட அதிரடிப்படையினரால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரசார கூட்டத்திற்கு வருபவர்கள் மண்டப வளாகத்தினுள் மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களை கொண்டுசெல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மீற்றர் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி நடந்துவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்