யாழில் போதைப்பொருள்களுடன் ஒருவர் கைது

21shares

ஐஸ் போதைப் பொருளைக் கடத்த முற்பட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 25 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலிருந்து வான் ஒன்றில் கடத்திச் சென்ற போது பருத்தித்துறையில் வைத்து சந்தேக நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் தற்போது யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!