சர்வதேச பொறிக்குள் சிக்கிய ஸ்ரீலங்கா!

387shares

சர்வதேச மட்டத்தில் ஸ்ரீலங்காவை நல்லாட்சி அரசே நெருக்கடிக்குள்ளாக்கியதுடன் பொறிக்குள் தள்ளிவிட்டது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பான பேச்சு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது, அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள வேண்டிய தேவையும், எமது நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையும் அரசுக்குக் கிடையாது.

திருகோணமலை துறைமுகத்தைக் கைவசப்படுத்தும் அடிப்படையிலே எம்.சி.சி. ஒப்பந்தம் அபிவிருத்திக்கான நிதி வழங்கல் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டிய தேவை தற்போதைய அரசுக்குக் கிடையாது.

கடந்த அரசு சர்வதேச நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள சிக்கல் நிலையை இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகளை முன்னெடுத்து தீர்வு காணவே முயல்கின்றோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெறும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் நன்கு அறிவார்கள்.

இதன் காரணமாகவே இவர்கள் பொதுத்தேர்தலுக்கு எதிராக நீதிமன்றில் 11 மனுக்கல் தாக்கல் செய்தார்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிலையான அரசை அமைக்கும் என்றார்.

You May Like This video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்