உலகம் முழுவதும் அணுகுண்டைப் போல் வெடித்த வீடியோ! என்னை சீண்டினால் நிலமை இது தான்- கருணா

913shares

அம்பாறை பகுதியில் அண்மையில் தான் தெரிவித்த கருத்தை சஜித் பிரேமதாசவே தூண்டிவிட்டதாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பில் குறைந்தது ஒரு பிரதிநிதித்துவமாவது வழங்கப்பட வேண்டும் என கோரி அரசிடம் கோருகின்றோம். அண்மையில் நான் தெரிவித்த கருத்து அதாவது 30 செக்கன் வீடியோ உலகம் முழுவதும் அணு குண்டு வெடிதத்தது போல் இருந்தது.

எல்லா ஊடகங்களும் அதை ஒளி, ஒலி பரப்பின. உண்மையில் நான் பொது பிரச்சினையை பேசினேன். அதாவது யுத்தத்தில் இழப்புகள் ஏற்பட்டது உண்மை. இனிமேல் அவ்வாறான இழப்புகள் தேவையில்லை என நான் பேசினேன்.

அதை சஜித் பிரேமதாச செம்மை செய்து பிரச்சாரம் செய்தார். இறுதியில் அவர் தலையில் அவரே மண்னை போட்டுக்கொண்டார். துப்பாக்கி உள்ளிட்டவைகளை தந்து 25 கோடிக்கும் அதிகமான பணத்தையும் தந்து இயக்கத்தை வளர்த்தது உங்கள் தந்தை என நான் தெரிவித்தேன்.

இதனால் அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் போக முடியாது போய்விட்டது. கருணாவை சீண்டினால் நிலமை இது தான் பிரச்சினையாகும் என்பது அவருக்கு தற்போது விளங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்