சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

1716shares

இரண்டாம் இணைப்பு

நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்திய போதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லத்தில்,பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கம் கைது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் அது தொடர்பான முழுமையான விபரத்தை வெளியிட மறுக்கின்றனர்.

இது தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் காலை தனது வீட்டிற்கு வந்த பொரிஸார் காரணமின்றி தன்னை கைது செய்துள்ளதாகவும், இன்றைய தினம் கரும்புலி தினம் என்பதாலேயே தன்னைக் கைது செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கரும்புலி தினத்திற்குரிய ஏற்பாடுகளை தான் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனினும் வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்