பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

580shares

அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை காரைதீவில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகம் திறப்பும் வேட்பாளர் அறிமுகமும் இடம்பெற்றது

இதன்போது உரையாற்றிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு ஒப்பானவர் என்று பேசியிருந்தார்.

இது தொடர்பில் பேசிய கருணா,

அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன். ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஒரு இராஜதந்திரி.

வடக்கு கிழக்கு என்னவென்று தெரியாத சுமந்திரன் கொழும்பிலே வளர்ந்தவர் . 75 கள்ள வாக்குகள் போட்டவன் என்று தன் வாயாலே கூறிய ஒருவர்தான் சிறீதரன் அவருக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பவனி வருவதற்காகவா நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றோம். வேட்பாளர் தெரிவு செய்யும் போது தமிழ் கட்சிகள் வர்த்தகர்களையும் , மதுபான சாலை உரிமையாளர்களையும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையும் வேட்பாளர்களாக்கி தெரிவு செய்தால் எவ்வாறு சேவை செய்வார்கள் .

ஒப்பந்தம் செய்வது எப்படி என்று தான் சிந்திப்பார்கள். இதை விளங்கி கொள்ளாமல் தேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு திரிகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் தான் தமிழ் கட்சியில் போட்டியிடுகின்றேன் .

அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்