இம்முறை யானை இல்லை அது காட்டுக்குள் போய்விட்டது: கிண்டலடித்த இராதாகிருஷ்ணன்

24shares

மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நம்மவர்கள் யானைக்கே வாக்களித்தார்கள். இம்முறை யானை சின்னம் இல்லை. அது காட்டுக்கு போய்விட்டது. எனவே, தொலைபேசிக்கு வாக்களிக்கவும். சஜித் பிரேமதாச பிரதமரானால் தான் நாங்கள் அமைச்சராக முடியும். எனவே, முதலில் தொலைபேசிக்கு வாக்களித்துவிட்டு மூன்று விருப்பு வாக்குகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு வழங்குங்கள்.

திகாம்பரம், உதயகுமார், ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரும் மலையக மக்களுக்கு கூடுதல் சேவைகளை செய்துள்ளோம். கண்டியில் இருந்து வாக்கு கேட்டுவந்துள்ளனர். மேலும் சிலரும் வருகின்றனர். இவர்களுக்கு வாக்களிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணிதான் இலங்கையிலுள்ள இரண்டாது பெரிய தமிழ்க்கட்சியாகும். 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்வசம் இருந்தனர். மூன்று அமைச்சுகள் கூட வழங்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம் நாம் சேவைசெய்து காட்டினோம் எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்