வெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

613shares

வெளிநாட்டுப் பெண் ஒருவரை காலிமுகத்திடலில் வைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சந்தேக நபர் ஒருவரும் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடலில் ஞாயிறு, மாலை ரஸ்ய நாட்டு பெண் ஒருவர் தமது மூன்று நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, 10 உள்நாட்டு பிரஜைகளால் அவர் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அக்குழுவில், மது போதையில் இருந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணை ஆபாசமான வார்த்தைகளில் பேசியதுடன் தடுக்க முயன்ற அவரின் நண்பரையும் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ய முயன்றதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். எனினும் இவ்வாறு அவர் துன்புறத்தப்படும் காணொளியை அப்பெண் தமது முகபுத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் 20 நிமிடங்களின் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாரிடம் அந்தப் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுற்றுலாத்துறை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்