இலங்கையர் மூவர் கட்டாரில் கழுத்து அறுத்து படுகொலை

633shares

கட்டாரில் தொழில் புரிந்து வந்த நிலையில், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரது சடலங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் களனி, பியகம வீதியில் களனி விகாரைக்கு அருகில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளமை இவர்களின் உடல்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

59 வயதான தந்தை, 55 வயதான தாய் மற்றும் 34 வயதான மகள் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களில் சடலம் இன்று அதிகாலை 7.10 மணி அளவில் கட்டாரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாக இன்று 7 சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவர்களில் ஏனைய மூன்று பேரது சடலங்கள் இயற்கையாக மரணமடைந்த நபர்களுடையவை என விமான நிலைய வைத்திய பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட மூன்று பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்