சீனாவின் மிரட்டலுக்கு பகிரங்க எச்சரிக்கை!

653shares

ஹொங்காங்கில் சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஹொங்காங் பிரஜைகளை நாடு கடத்துவதற்கான இருநாட்டு ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்,

இவ்வாறு சீனா கொண்டுவந்துள்ள பாதுகாப்புச் சட்டம் மக்களின் உரிமையை நசுக்குகிறது.

இதனால் ஹொங்காங்கிலிருந்து அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.இது சீனாவை மிகுந்த எரிச்சலைடைய வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அவுஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது. இது நாளடைவில் வர்த்தக போராகவும் மாறியுள்ளது.

இதே வேளை அவுஸ்திரேலிய அரச நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் இரு நாடுகளுக்குமான உறவு மேலும் விரிசலடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like This video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்