ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா! மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு

560shares

அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களிலும் வியாபாரம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பஸ்களில் விற்பனையில் ஈடுபடுவோர் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதாக பொதுமக்களிடமிருந்து போக்குவரத்து அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளாந்தம் பஸ்களுக்குள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களினால் கொரோனா பரவக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் பஸ்களுக்குள் விற்பனை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு பாதுகாப்பு தரப்பினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்