இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவரால் யாழில் கொரோனா அச்சம்! வலை வீசி தேடும் அதிரடிப் படையினர்

94shares

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்திவந்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில், அவருடைய குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வேம்படிக் கடற்கரையில் நேற்று முன்தினம் காலை 54 கிலோ கஞ்சா பொதிகள் இரண்டு கடற்படையினரால் மீட்கப்பட்டன.

எனினும் அதனைக் கடத்தி வந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படகு உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் கடந்த இரு தினங்களாக முன்னெடுத்து வருகின்றனர்.

கஞ்சா பொதிகளை இந்தியாவிலிருந்து எடுத்து வந்த படகும் மீட்கப்பட்டது. எனினும் படகின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிர நிலையை எட்டியுள்ளது.

அதனால் அங்கிருந்து கஞ்சா பொதியை யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வருவோரால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையிலேயே இந்த நிலையிலேயே கஞ்சா ஏற்றி வந்த படகின் உரிமையாளரையும் கஞ்சா கடத்தி வந்தவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பொதுமக்களின் தகவலுக்கமைய ஒருவரை இனங்கண்ட அதிரடிப்படையினர் அவரது வீட்டுக்கும் அவருடைய உறவினர் வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் கஞ்சா கடத்திவந்தவர் என இனங்காணப்பட்டவர் இன்னும் தலைமறைவாகி இருப்பதனால் அவரால் சமூகத்திற்கிடையில் பரவிவிடுமா? என அச்சத்தில் பிரதேச சுகாதார பிரிவினரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்