இராணுவத்தின் கரங்களுக்கு செல்லும் முக்கிய நடவடிக்கை!

384shares

மிகக்குறைந்த செலவில் வாகனசாரதி அனுமதிப்பத்திரத்தினை இராணுவத்தினால் தயாரிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சூழ்நிலையில், நேற்றைய தினம் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகனசாரதி அனுமதிப்பத்திரமொன்றிற்காக 1340 ரூபாயை கட்டணமாக செலுத்தவேண்டியுள்ளது, வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் வழங்கியுள்ளதால் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய பணம் வெளிநாட்டுக்கு செல்கின்றது என நேற்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், மிகக்குறைந்த செலவில் வாகனசாரதி அனுமதிப்பத்திரத்தினை இராணுவத்தினால் தயாரிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக இராணுவம் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்