கொரோனாவால் பலியானோரின் குடும்பத்துக்கு தலா 6 இலட்சம்! அரசாங்கம் அறிவிப்பு

190shares

வௌிநாடுகளில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஸ்ரீலங்கா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் வீ. வன்சேகர தெரிவித்துள்ளார்.

இதுவரை வௌிநாடுகளில் 35 உயிரிழந்துள்ள ஸ்ரீலங்கா தொழிலாளர்களின் காப்புறுதி தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

வௌிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா 6 இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படும்.

இதுவரை 10 பேரின் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களே எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்