இராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி! தனிமைப்படுத்தப்பட்ட 200 பேர்

196shares

கந்தகாடு மறுவாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புட்ட 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதுளை மாவட்டத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.

சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்த தகவல்களின்படி, குறித்த மூவரும் கந்தகாடு மறுவாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவ வீரர்கள் விடுமுறையில் தங்களின் வீடுகளுக்குச் சென்று மீண்டும் பணிகளுக்கு திரும்பியபோது அவர்களை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பதுளை – கல்கிரியகம பகுதியில் 200 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்