யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் கொரோனா தொற்று உறுதியான நபருக்கு தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆகையால் யாழ். போதனா வைத்தியசாலை 7ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த நபருக்கு மீளவும் இரண்டு தடவைகள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அந்த இரண்டு தடவைகளும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video