கிளிநொச்சியில் யானை தாக்கி படுகாயமடைந்த விரிவுரையாளர் பரிதாபமாக மரணம்

239shares

காட்டு யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு, களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்ஷி (Gayathri Dilrukshi) 32 வயதுடைய பெண் விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்