சஜித்தை கைது செய்ய சதித்திட்டம்? ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர் விளக்கம்

47shares

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கைது செய்வது தொடர்பில் அரசாங்கத்துக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை எதுவுமில்லை என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி பிளவுபட்டால் அரசாங்கத்துக்கே சாதகமான நிலையேற்படும் என்பதால் ஐக்கியமக்கள் சக்திக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உடன்பாடு காணப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித்பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கும்,கூட்டணியொன்றை உருவாக்குவதற்கும் நியமன சபையின் உறுப்பினராக அவரை நியமிப்பதற்கும் ஐக்கியதேசிய கட்சி முன்வந்த போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர்களே ஐக்கியதேசிய கட்சியை பிரித்தனர் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கியமக்கள் சக்தியை சேர்ந்த ஒருவரை பொதுச்செயலாளராக நியமிப்பதற்காக ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நான் விலக முன்வந்தேன் என தெரிவித்துள்ள அகிலவிராஜ் காரியவசம் எனினும் பிரேமதாசவும் அவரது ஆதரவாளர்களும் தனித்து போட்டியிட தீர்மானித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்