கடுமையாக அமுல்படுத்த வேண்டும் - பாதுகாப்பு செயலர் ஆரூடம்!

30shares

சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சட்ட அமுலாக்க முறைமையை ஒழுங்குபடுத்தியதன் மூலம் அண்மைக்காலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை முகாமை செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பாதுகாப்பு அமைச்சினது அதிகாரிகளின் வகிபாகம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நிலையான அபிவிருத்தி இலக்குகள் என்பது, ஒவ்வொரு பெண் மற்றும் பெண் குழந்தைகள் உட்பட நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் வன்முறையற்ற சூழலில் ஒவ்வொரு குழந்தையும் வளர்வதனை உறுதி செய்யும் வகையிலும் சட்டத்தின் ஆட்சி இடம்பெறும் நாட்டினை குறிக்கும்.

இந்த விடயங்களே தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் செயற்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய மிக முக்கிய அம்சங்களாகும்.

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுறுதல் மற்றும் வளங்கள் அழிவடைதல், தொற்று நோய்கள், இயற்கை பேரழிவுகள், உணவுப் பற்றாக்குறை போன்ற இயற்கை அச்சுறுத்தல்கள், சட்டவிரோத குடிபெயர்வு, துப்பாக்கி பாவனை, ஆட் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இலகு, நடுத்தர மற்றும் உயர் தீவிரத்தன்மையான முரண்பாடுகள் போன்ற மனிதனால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்கள் என்பன அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

அரச அதிகாரிகள் என்ற வகையில் நமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் நமது முழுமையான ஒத்துழைப்பை தேசிய கொள்கை திட்டத்திற்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

எமது அதிகார வரம்புக்குள் காணப்படும் வழிகளை அடையாளம் காண, தற்காலத்திலும் எதிர்காலத்திலும் மக்களின் அமைதியான மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கான முன்மொழிவு திட்டத்தை அளிக்கக்கூடிய நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக நாம் ஒரு நல்ல புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு தேசம் என்ற வகையில், ஸ்ரீலங்காவானது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, சமூக நீதியை ஊக்குவிப்பதிலும் பொருளாதார செழிப்பை வளர்ப்பதிலும் உலகளாவிய முயற்சிகளுக்கு அதன் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது.

அமைதி, நீதி மற்றும் சமமான அபிவிருத்தி உள்ளிட்ட உலகளாவிய நிகழ்ச்சி நிரல் ஊடாக ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி கொள்கையை ஏற்படுத்துவது பொருத்தப்பாடாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்