எட்டாவது அகவையில் வன்னி விழிப்புலனற்றோர் அமைப்பு: பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.....

18shares

வன்னியில் விழி இழந்த மக்களோடு வழி நெடுக பயணிக்கும் வன்னி விழிப்புலனற்றோர் அமைப்பு எட்டாவது அகவைக்குள் காலடி வைக்கிறது.

தாயகத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடந்து முடிந்த யுத்தத்தின்பால் அவயவங்களை இழந்த குடும்பங்கள் பல வன்னியில் இருந்தாலும் விழி இழந்த குடும்பங்ளோடு அவர்களின் தேவைகளை பல்வேறுபட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து பயணிக்கும் ஒரு தன்னார்வ அமைப்பாக வன்னி விழிப்புலனற்றோர் அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

இவ்வமைப்பானது யுத்தத்தின் பின்னர் 2013 ஆண்டு விழி இழந்த நபர்களை ஒன்றிணைத்து இயங்கி வருகிறது.

இவ்வமைப்பு இன்று 01.08.2020 ஆம் திகதி தனது ஏழாவது ஆண்டு நிறைவை கிளிநொச்சியிலுள்ள தனது அமைப்பின் அலுவலகத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

இந்நிகழ்வில் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதியீட்டங்களை மேற்கொண்டுவரும் IBC தமிழ் அமைப்பு இன்றும்கூட நிகழ்வுக்கு வருகை தந்திருந்த விழிப்புலனற்ற குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்தது.

இன்று எட்டாவது ஆண்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் வன்னி விழிப்புலனற்றோர் அமைப்பை வாழ்த்துவதில் IBC தமிழ் பெருமையடைகிறது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்