மகிந்தவின் கட்சியின் வெற்றிக்காக பாடுபடும் கே.பி மற்றும் கருணா

124shares

மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக வடக்கில் கே பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் கிழக்கில் கருணாவும் ஈடுபட்டு வருவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க, இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கே.பி முன்னெடுத்துச்செல்வது முறையற்றது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இந்தியாவினால் கே.பி மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

அதுமாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரகசிய டீல் ஒன்று காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், அவை தொடர்பில் பகிரங்கப்படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்