வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

132shares

வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மாதிரி வாக்களிப்பு நிலையங்கள் அமைத்து ஒத்திகைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கருத்திற்கொண்டு அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு வாக்காளர்களைத் தாம் கோருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளைக் கழுவிவிட்டு வருவதும் கட்டாயமானது. வாகளிப்பு நிலையத்தில் முதலாவது உத்தியோகத்தரிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் சமர்ப்பித்த பின்னரும் வாக்காளர்கள் கைகளை கழுவ நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு வாக்காளருக்கும் தொற்று நீக்கப்பட்ட பேனா அல்லது பென்சில் வழங்கப்படும். வாக்கைச் செலுத்திவிட்டு வெளியேறும் போது கைகழுவுவது அவசியமாகும். இந்த ஏற்பாடுகள் காரணமாக வாக்காளர்களுக்கு கிருமி தொற்றக்கூடிய சாத்தியம் இல்லையென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்