ஸ்ரீலங்காவில் முற்றிலும் மாறுபட்ட நிகழ்வு! வெளியானது தகவல்

474shares

கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இம்முறை இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரசாரக் காலத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் எந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸாருக்கோ, தேர்தல் ஆணைக்குழுவிற்கோ, அரச அதிகாரிகளுக்கோ அழுத்தங்களை கொடுக்கவில்லை என தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இம்முறை இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரசாரக் காலத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் எந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸாருக்கோ, தேர்தல் ஆணைக்குழுவிற்கோ, அரச அதிகாரிகளுக்கோ அழுத்தங்களை கொடுக்கவில்லை.

இந்த நிலைமையானது 5 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்பட்ட நிலைமையை விட்ட முற்றிலும் மாறுப்பட்டது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது இவர்கள் மூவர் மாத்திரமல்ல, உயர் மட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுத்தனர்.

தெற்காசிய நாடு என்ற வகையில் அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் இல்லாது அதிகாரிகள் தேர்தலை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப்பட்டமை வெற்றியானது. இதனடிப்படையில் வாக்காளர்கள் தமது விருப்பத்தை தெரிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன் கடந்த தேர்தல் காலங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை தேர்தல் வன்முறைகள் குறைவாக காணப்பட்டது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்