மூன்றரை வயதான மகளை கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை

47shares

மகளை கொலை செய்த தந்தை ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி பிரமில ரத்நாயக்க இன்று இந்த மரண தண்டனை உத்தரவை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நுவரெலியா - ராகலை ஹல்கன்னோயாவை சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் 10 ஆம் மாதம் 24 ஆம் திகதி இரவு தனது வீட்டில் மூன்றரை வயதான சுரேஷ் இந்தியா என்ற தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியின் மனைவி கடந்த 2014ஆம் குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அந்த பெண் மற்றுமொரு இலங்கை நபருடன் சட்டவிரோத உறவை பேணி வந்ததோடு, தனது குழந்தைகளை கவனிக்காது இருந்துள்ளதால், குற்றவாளி தனது மூன்றரை வயதான மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு

பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை