தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்!

8shares

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நபர்கள் இன்று மாலை 4 மணிக்குப் பிறகு வாக்களிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிமைப்படுத்தல் நிறைவுசெய்த நபர்கள் தங்கள் குடும்பங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு தங்கள் சொந்த போக்குவரத்து முறைகளை பயனப்டுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கும் இந்த செயல்முறை பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 8,000 சுகாதார ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..