தேர்தல் அமைதிக் காலத்தில் பதிவாகிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்: கண்காணிப்பு நிலையம் குற்றச்சாட்டு!

15shares

ஸ்ரீலங்காவில் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று சுமூகமான முறையில் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் 70 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த சம்பவங்களில், தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் கேகாலை மாவட்டத்தில் 15 சம்பவங்களும், காலி மாவட்டத்தில் 10 சம்பவங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை இதுவரை சட்டவிரோத பிரசாரம் தொடர்பாக 52 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

குறித்த சம்பவங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 39 தேர்தல் வன்முறை சம்பவங்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 11 தேர்தல் வன்முறை சம்பவங்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 4 தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?