அம்பாறையில் இரு கட்சிகளுக்கிடையில் மோதல்! வாகனங்களும் வீடும் பலத்த சேதம்

600shares

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாக்கு சாவடிகளுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். 525 வாக்களிப்பு நிலையங்களில் 513979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இத்தேர்தலானது சுகாதார நடைமுறைக்கமைய இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 7 ஆசனங்களுக்காக 20 க்கும் அதிகமான அரசியல் கட்சிகளும் பல சுயேட்சைக்குழுக்களும் களமிறங்கி உள்ளன.

இதே வேளை அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில இடங்களில் இரு வேறு கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் 5 மோட்டார் சைக்கிள் மற்றும் வீடு ஒன்றும் பாரிய சேதமைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?