லெபனானில் இடம்பெற்ற பாரிய அனர்த்தம்! இலங்கையர்கள் பாதிப்பு - தற்போது வெளிவந்த தகவல்

96shares

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று இடம்பெற்ற வெடிப்பில் மற்றொரு இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் காயமடைந்ததாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டதுடன் 4,000 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாரிய குண்டுவெடிப்பில் இதுவரை இரண்டு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டினரைப் பற்றி லெபனான் பொது சுகாதார அமைச்சகத்திடம் மேலதிக தகவல்களை தேடுவதாக இலங்கை தூதரகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரக கட்டிடம் மற்றும் அதன் இராஜதந்திர பணியின் குடியிருப்புகளுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த வெடிப்பில் தூதரக அதிகாரிகள் காயமடையவில்லை.

சிரியா மற்றும் இஸ்ரேலின் எல்லையிலுள்ள இந்த மேற்கு ஆசிய நாட்டில் சுமார் 25,000 இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர்.

நிலைமை குறித்து தகவல்களைப் பெற விரும்புவோர் லெபனானில் உள்ள இலங்கை வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பெய்ரூட்டில் உள்ள தூதரக அலுவலகத்தை 10961 5769585 அல்லது அதன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?