கொரோனா அச்சத்திற்கு மத்தியில் ஸ்ரீலங்காவின் 09 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று அனைத்து மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்ததாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்பில் 7,452 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
இதேவேளை பொதுத் தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் 05.00 மணியுடன் நிறைவடைந்த வாக்குப் பதிவுகளுக்கு அமைய மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி,
கொழும்பு 68%
கம்பஹா - 68%
களுத்துறை - 65 %
திகாமடுல்லை - 73%
கண்டி - 72%
அம்பாந்தோட்டை - 76%
மொணராகலை - 73%
கேகாலை - 70%
குருநாகல் - 65%
இரத்தினபுரி 72%
மாத்தளை - 72%
பதுளை - 65%
மட்டக்களப்பு - 76%
புத்தளம் - 65%
காலி - 70%
மாத்தறை - 70%
நுவரெலியா - 75%
வன்னி - 74%
திருகோணமலை - 74%
யாழ்ப்பாணம் - 67%
அநுராதபுரம் - 70%