ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பில் வாக்கு எண்ணும் நிலையங்கள்!

31shares

ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பில் வாக்கு எண்ணும் நிலையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

பொதுத்தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. வாக்குபெட்டிகளை வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகளின் போது ஆயுதம்தாங்கிய பொலிஸார் பாதுகாப்புவழங்கவுள்ளனர்.

இதேவேளை, ஒவ்வொரு வாக்குபெட்டிக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். வாக்குபெட்டிகள் கொண்டுசெல்லப்படும் வீதிகளில் ஆயுதமேந்திய பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சோதனை சாவடிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வாக்கு எண்ணப்படும் நிலையங்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!