33 வருடங்களின் பின் புத்தளத்துக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

84shares

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையும் தெரிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட சிந்தக்க அமல் மாயாதுன்ன 46,058 விருப்பு வாக்குகளையும்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் தேசிய கூட்டணி தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலிசப்ரி ரஹீம் 33, 509 விருப்பு வாக்குகளையும் பெற்று 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சரான நெய்னா மரிக்கார், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்