எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

1508shares

என்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக சதி இடம்பெற்றுள்ளதாகவும் கருத்து மோதல்கள் இடம்பெறுவதுடன் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியின் தலைமைகளுடன் இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். எனவே இவ்விடயத்தில் அவர்கள்தான் தீர்மானம் எடுக்க வேண்டும். அத்துடன் ஆதரவாளர்களின் எண்ணங்களில் தான் எனது வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டது.

இவ்வாறு ஆதரவாளர்களும் என்மீது முழுமையான நம்பிக்கையில் இருந்தபோதும் பெறுபேறுகள் முடிவுகளில் பின்தள்ளப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முடிவை நான் ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அத்துடன் மத்தியகல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில், பாதுகாப்பு படையினர் இறக்கப்பட்டமை குறித்தே சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேன். மாறாக வெளியான பெறுபேறு குறித்து அவரை நான் குறிப்பிடவில்லை.

மேலும் எனக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை