ஒட்டுமொத்தமாக நிராகரித்த ரணில்! ஆனால்...... வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

543shares

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

எனினும் தாம் பொதுவாழ்க்கையில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒய்வுபெறப்போவதாக இந்த அறிவிப்பு அமையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தேசியப்பட்டியலுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சி தொடர்ந்தும் ஆராய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெள்ளையடிப்பு செய்த ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கான வாய்ப்புக்களையும் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி வேறு ஒரு கட்சி என்பதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ரணில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையப்போவதில்லை என்று அந்தக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் தெரிவித்திருக்கிறார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?