பூதாகரமாகும் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பிரச்சினை! இரவோடு இரவாக பறந்த கடிதங்கள்

428shares

தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரச்சினை தற்போது அதிகம் பேசப்படுகின்றது. தமிழரசுக்கட்சிக்கு மட்டுமல்ல சஜித் கட்சியிலும் இந்த தேசியப்பட்டியல் பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக தவராசா கலையரசனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே இந்த ஆசனம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் இரவோடு இரவாக சம்பந்தன், மாவை சேனாதிராஜாவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

“தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்” என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

தேசியப்பட்டியல் குறித்து தமிழரசுக் கட்சிச் செயலாளர் துரைராஜசிங்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு உருவாகிய கடுமையான எதிர்ப்பையடுத்தே இந்த முடிவை சம்பந்தன் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.

அதற்கான பதில் கடிதத்தை சம்பந்தனுக்கு நேற்றிரவே மாவை சேனாதிராஜா, அனுப்பி வைத்துள்ளார். “தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசி பொருத்தமான முடிவு எடுப்பேன்” என்று தனது பதிலில் மாவை தெரிவித்திருக்கிறார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் புளொட், ரெலோ தலைவர்களுடன் மாவை சேனாதிராஜா இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை