கலையரசனா? சசிகலாவா? மாவையா? நடக்கப்போவது என்ன?

492shares

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமும் அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

மேலும் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேகரிக்க இருந்ததாகவும், எனினும் கட்சியினதும் மற்றும் பலரது அறிவுரைகளின்படியே தான் அந்த நியமனத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வெ ளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரது நியமனம் கட்சியினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் வெ ளியாகியிருந்த வர்த்தமானியில் அவரது கலையரசனது பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாவை சேனாதிராசாவிடம் ஊடகம் ஒன்று நேற்று வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

கலையரசனது நியமனத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த முடிவை யார் எடுத்தார்கள் என்பது தான் எமது கேள்வி. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடாமல் இந்த முடிவு சம்மந்தமில்லாதவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

நான் இத் தேசிய பட்டியல் நியமனத்தை பெற்றுக்கொள்ள நினைத்திருக்கவில்லை. எனினும் தமிழரசு கட்சி மட்டத்திலும் எமது புலம்பெயர் கட்சி உறுப்பினர்கள் மட்டத்திலிருந்தும் என்னை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதன் பின்னரே நான் சம்மதித்தேன்.

எனினும் நான் சசிகலா ரவிராஜையே தேசியப்பட்டியலுக்காக பிரேகரிக்க இருந்தேன். எனினும் கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் அந்த முடிவை கட்சியுடன் கலந்துரையாடாமல் சம்மந்தமில்லாத தரப்பினர் நடந்துகொண்ட விதமே அதிருப்தியளிக்கிறது.

இதேவேளை தேசியப்பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை மீளப் பெறுவதா அல்லது அதனையே அமுல்படுத்துவதா என்பது தொடர்பாக நாம் கட்சி மட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானிக்க முடியும் என்றார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்