வடமாகாணத்திற்கு ஒருபோதும் இந்த அதிகாரத்தை வழங்கப்போவதில்லை!

546shares

வடமாகாணத்துக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என்று மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றீட்டியிருந்தார்.

இந்நிலையில் 12ஆம் திகதி அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன்போது, மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் நேற்றைய தினம் தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வடமாகாணத்துக்கு என விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பொலிஸ்துறை பிளவுண்டுபோகும்.

மாகாண பொலிஸ் தலைவர்களும் உருவாகுவார்கள். எனவே வட மாகாணத்திற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - டக்ளஸிற்கு பதில்

ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - டக்ளஸிற்கு பதில்