தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல்

64shares

வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் 01 ஆம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் செயற்றிட்டத்தை உடனடியாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று கடந்த பெப்ரவரி மாதம் தெரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளை பணிக்கு அமர்த்துவதற்காக நீண்டகால அபிவிருத்தி செயலணியும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்