இந்து ஆலயத்திற்குள் கொள்ளை; மோப்ப நாய்களுடன் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார்!

82shares

நோர்வுட் கிழ்பிரிவு தோட்ட சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தினை உடைத்து ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த 125 வருட பழமையான சிறீ முத்துமாரியம்மன் ஆலயசிலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தசம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த தோட்ட ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் ஆலயத்தில் உள்ள சிலைகள் ஆலயத்தின் அருகாமையில் உள்ள அறை ஒன்றில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அறையின் கதவு உடைக்கப்பட்டு அம்மன் சிலை களவாடபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8மணி அளவில் குறித்த ஆலயத்தில் பூஜை ஏற்பாடுகளை செய்ய ஆலயத்தின் குருக்கள் ஆலயத்திற்கு வந்த போது அறையின் கதவு உடைக்கபட்டிருந்ததை அவதானித்த ஆலய நிர்வாகத்தினர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த நோர்வுட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையினை களவாடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும் இதுவரையிலும் சந்தேக நபர் எவரும் கைது செய்யபடவில்லையென நோர்வுட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்