விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு - நீதிபதிகள் கொடுத்த உத்தரவு

495shares

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நாளை (16) வரை ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் வடக்கு மாகாண சபையின் தலைமைச் செயலாளர் அந்தோணி பிள்ளை பதினாதன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னாள் செயலாளர் சிவலிங்கம் சத்தியசீலன் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மீதான குற்றச்சாட்டு தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளில் தாம் நிரபராதி என அனந்தி சசிதரன் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதன்போது “தங்களின் இரண்டு நிபந்தனைகளுக்கு பிரதிவாதிகள் இணங்கினால் வழக்கை வாபஸ் பெற தயாராகவுள்ளதாக” மனுதாரரான ப.டெனிஸ்வரன் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது சேவை பெறுநரை முறையற்ற வகையில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில் சி.வி. விக்னேஸ்வரன் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சுப் பதவியில் அமர்த்துமாறும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் மனுதாரர்கள் நிபந்தனை முன்வைத்துள்ளனர்.

இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் பிரதிவாதிகள் இணங்கினால் தங்களின் மனுவை வாபஸ் பெற தயாராக உள்ளதாகவும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

எனினும், எவ்வித நிபந்தனைகளுக்கும் இணங்க தமது தரப்பு தயார் இல்லை எனவும் வழக்கை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகீஸ்வரன் மன்றில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளன.

You May Like This video

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..