இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! நாமல் வெளியிட்ட செய்தி

27shares

இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கைக்கு வருகை தரவிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேசுக்கு அறிவித்துள்ளது.

இருப்பினும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 7 நாட்கள் தனிமைப்படுத்தலையே விரும்புகிறது. கடந்த நான்கு மாதகாலமாக எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாதுள்ளதால் பயிற்சிக்காலத்தை மேலும் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் இடையில் இது தொடர்பில் நீண்ட காலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இன்னமும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலும் ஊடகங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மேலும் கூறியதாவது, இந்த கிரிக்கெட் தொடர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய