ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்

55shares

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த விடயம் தெரியவந்தது. இதனால், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இங்கிலாந்து அரசு நீக்கம் செய்துள்ளது..

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டத்தையடுத்து இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனையை ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆனால், இந்தியாவில் தடுப்பூசி பரிசோதனையை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பரிசோதனையை மீண்டும் தொடங்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியையடுத்து, தற்போது நிறுத்தப்பட்டுள்ள ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த பரிசோதனையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் கூடிய விரைவில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு

பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு