மன்னார் நகர சபை இரவோடிரவாக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

111shares

மன்னாரில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் தலைமையில் நேற்று இரவு அதிரடியாக மூடப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் இடம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் மன்னார் நகர சபையின் புதிய பேருந்து தரிப்பிட பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

குறித்த பேருந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் சேவைகள் இணைந்த சேவையாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் மாத்திரம் இடம் பெற்று வந்த போதும், மன்னார் அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை. எனினும் மன்னார் நகர சபையிடம் கால அவகாசம் கோரிய நிலையில் தொடர்ச்சியாக தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தில் அசை போக்கு வரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோரிய கால அவகாசமும் முடிவடைந்த நிலையில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை மன்னார் நகர சபை நேற்று அதிரடியாக மூடியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்