நீதிமன்ற உத்தரவை மீறி நினைவேந்தல்! சற்று முன்னர் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் சிவாஜிலிங்கம்

195shares

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை மேற்கொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு நேற்று முந்தினம் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், நேற்று தடையுத்தரவையும் தாண்டி சிவாஜிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொண்டிருந்தார்.

மேலும் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், யாழ் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார். இதானல் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதன் காரணமாகவே இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்